வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:47 IST)

சிஎஸ்கேவை விட்டு விலகி அந்த அணிக்காக ஆட விரும்புகிறாரா ஜடேஜா?

டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். அதையடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே அவர் டி 20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால் அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 35 வயதாகும் ஜடேஜா, இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி, தன்னுடைய சொந்த மாநில அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.