செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:16 IST)

கம்பீருக்கு இந்திய அணியில் எந்த சவாலும் இல்லை… என்ன சேவாக் இப்படி சொல்லிட்டாரு..!

IPL டி 20  கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு கொல்கத்தா அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் கவுதம் கம்பீர்.  இதையடுத்து இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதில் டி 20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது.

இந்நிலையில் கம்பீர் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆனது குறித்து பேசியுள்ள அவரின் நண்பரும் முன்னாள் இந்திய வீரருமான வீரேந்திர சேவாக் “ கம்பீர் இந்திய அணிக்குப் பொறுப்பேற்றது நல்ல விஷயம்தான். ஆனால் அவருக்கு இந்திய அணியில் பெரிதாக எந்த சவாலும் இல்லை. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாம் தொழில்முறை வீரர்கள்.

மேலும் அவர்கள் தற்போதுதான் டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளார்கள். அவர்கள் பணி என்ன என்பதை கம்பீர் விளக்கினாலே போதும். எப்போதும் பயிற்சியாளர்களை விட வீரர்களுக்குதன பெரிய சவால்.” என தெரிவித்துள்ளார்.