1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:51 IST)

உலகக்கோப்பை மகளிர் டி20..! இந்திய அணி அறிவிப்பு..!!

Indians Womens
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பட்டியலை இந்திய அணி அறிவித்துள்ளது.  கூடுதலாக மூன்று வீராங்கனைகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. ஆனால், வங்கதேச நாட்டில் கலவரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
 
வீராங்கனைகள் விவரம்:
 
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும் சஜனா சஜீவன். 
 
கூடுதல் வீராங்கனைகள்:
 
உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர் மற்றும் சைமா தாகூர். 

 
இதுவரை இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த முறை இந்திய அணி பலமாக இருக்கும் நிலையில் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.