1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Yuvraj singh gave support to rohith and virat

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

விராட் கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் இந்த சீரிஸ் முழுவதும் அதிகமுறை அவுட் ஆகி  வெளியேறினார். ஆனால் அந்த பந்துகளை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

அதே போல ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான். அதனால் அவர்கள் இருவரும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என இப்போது குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் யுவ்ராஜ் சிங் அவர்கள் இருவருக்கும் ஆதரவாகப் பேசியுள்ளார்.

அதில் “ரோஹித் & விராட் ஆகியோர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் குடும்பம் மற்றும் சகோதரர்களை ஆதரிப்பதே எனது வேலை. அவர்கள் கடந்த காலங்களில் என்ன சாதித்தார்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். அவர்கள் கண்டிப்பாக திரும்ப வருவார்கள்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!