1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 8 ஜனவரி 2025 (09:18 IST)

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

சமீபகாலமாகவே இந்திய அணியில் யுஷ்வேந்திர சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.  இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக எல்லாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் தன்னுடைய மனைவி தனுஸ்ரீ வெர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் காணப்பட்டன. அதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனுஸ்ரீயின் புகைப்படங்களை எல்லாம் நீக்கி, அவரை பின்தொடர்வதையும் நிறுத்தினார்.

இந்நிலையில் இப்போது சஹால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அமைதியே சிறந்த இசை.. எல்லா சத்தங்களையும் தாண்டி அதை உணரமுடிந்தவர்களுக்கு” என சாக்ரட்டீஸின் கூற்றைப் பதிவு செய்துள்ளார். விவாகரத்து பற்றி இதுவரை சஹால் மற்றும் தனுஸ்ரீ ஆகிய இருவருமே நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.