இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா!..
இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பே இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்தாவிட்டால் அந்நாடுகளின் மீது அதிக வரி விதிப்போம் என கூறினார்.
சொன்னது போலவே இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தினார். ஆனால், டிரம்பின் முடிவை அமெரிக்க உச்சநீதிமன்றம் கண்டித்தது. அதன்பின், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வரிகள் குறைக்கப்பட்டது.
இந்நிலையில்தான், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் மசோதாவை சமீபத்தில் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது அந்த மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய, சீனா பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.