1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. what are rules for le mans sports

அஜித் கார் ரேஸ்!.. LE MANS கார் பந்தயத்தின் விதிமுறைகள் என்ன?..

le mans
கடந்த சில வருடங்களாகவே கார் பந்தய போட்டிகளில் கலந்து வரும் நடிகர் அஜித் தற்போது லண்டன் சில்வர் ஸ்டோன் மைதானத்தில் நடைபெறும் Le Mans போட்டியில் நேற்று கலந்து கொண்டார். அந்த போட்டியில் அஜித்தின் டீம் வெற்றி பெற்றது.

முக்கியமாக முன்னாள் நடிகரும் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவுள்ள ஜோசப் விஜய் லண்டன் சென்றிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற Le Mans போட்டியை  கொடியசைத்து துவக்கி வைத்தார். எனவே நேற்று மாலை முதலே  விஜய், அஜித் கார் ரேஸ் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும்தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில்தான் Le Mans கார் பந்தயத்தின் விதிமுறைகள் தெரிய வந்திருக்கிறது..

சவாலான ரேஸ் டிராக்கில், ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் கார் பந்தயம் நடைபெறும்.. பந்தய நேரத்தில் அதிக சுற்றுகளை முடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்..

ஒவ்வொரு கரையும் இரண்டு ஓட்டுனர்கள் மாறி மாறி ஓட்டுவார்கள்.. தொழில்முறை கார் ரேஸர்கள் மட்டுமின்றி ரேஸ் ஆர்வலர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

நேற்று சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடந்த பந்தயத்தில் 44 கார்கள் பங்கேற்றன. அதில், 32 கார்களை Professional ரேசர்கள் இயக்கினார்கள். மீதமுள்ள 12 கார்களை ரேஸ் ஆர்வலர்களும், Professional ரேசர்களும் மாறி மாறி ஓட்டினார்கள்.

LIGIER JS P325 காரை, ரேஸ் ஆர்வலராக அஜித்குமரும் Professional ரேசராக ரோமன் வோஸ்னியாக்கும் இயக்கினார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இது லீடர்சிப் இல்ல!.. ஏமாத்துற வேலை!. விஜயை அட்டாக் பண்ணினாரா விஜய் சேதுபதி?!...