1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. We will not tolerate illegal entry! - US warns Indians!

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

US Embassy

சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில், அதுகுறித்து எச்சரிக்கும் விதத்தில் அமெரிக்க தூதரகம் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ட்ரம்ப் அரசு வெளியேற்றி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு விமானத்தில் வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் சமீபத்தில் இந்திய மாணவர் ஒருவரை தரையில் அமிழ்த்தி கை விலங்கிட்டு வலுக்கட்டாயமாக அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றும் வீடியோவை குணால் ஜெயின் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அது வைரலான நிலையில், இந்தியர்கள் அமெரிக்காவால் கீழ்மையாக நடத்தப்படுவதை கண்டித்த பலரும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் “அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வ பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. சகித்துக் கொள்ளவும் மாட்டோம்” என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கெடிப்பிடித்தனமும், அதை இந்தியா கண்டிக்காமல் இருப்பதும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!