1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Epstein Files Resurface: Elon Musk Accuses Trump, Deletes Post

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்க அரசியலும், உலக பிரபலங்களும் தவிக்கும் வகையில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 
 
எக்ஸ்  தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், இந்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறியிருந்தார். இதனால்தான் அந்த ஆவணங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பிறகு அந்த பதிவை நீக்கியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து இது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் ஒரு பெரும் முதலீட்டாளர். உலக பணக்காரர்களுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்த அவர், வாடிக்கையாளர்களுக்காக லாபகரமான நிதி ஏற்பாடுகளை செய்தார். ஆனால் அவரது  பின்னணியில், இளம் பெண்களை, சிறுமிகளை தவறான நோக்கில் பயன்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
அவருக்கு சொந்தமான ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து, பல அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை முழுமையாக வெளிவந்தால், பலர் பதவியை இழக்கக் கூடும் என்கின்றனர்.
 
மஸ்க் வெளியிட்ட பின்னணியும், திரும்பப்பெற்றதுமான குற்றச்சாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. டிரம்ப் அதனை முற்றாக மறுத்துள்ளார். இது எப்ஸ்டீன் மர்ம மரணத்துடன் சேர்ந்து, இன்னும் பல கேள்விகளை தூண்டும் வகையில் உள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!