1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Trump Claims Credit for India-Pakistan Ceasefire for the 10th Time

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிலையை முடிவுக்கு கொண்டு வந்தது தனது தலையீட்டால் தான் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது வரை இதே கருத்தை அவர் பத்து முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால் யாரும் அவருடைய கூற்றை நம்ப தயாராக இல்லை.
 
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வழியாக பரபரப்பான நிலை ஏற்பட்டது. இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து நான்கு நாட்கள் மோதியபின், சண்டை சற்றே நிலைதடுமாறியது. அதையடுத்து, “வணிகத்திற்காக நடத்திய உரையாடலால் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமாதானம் ஏற்பட்டது” என்று டிரம்ப் அறிவித்தார்.
 
இந்த பேச்சு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுப்புகின்றன. காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், “மோடி ஏன் இதைத் தவிர்க்கிறார்? டிரம்ப் பொய் சொல்கிறாரா, அல்லது அவர் சொல்வது உண்மையா?” எனக் கேட்டுள்ளார்.
 
அமெரிக்க ஊடகங்களுக்கு பேசிய டிரம்ப், “அணு ஆயுதம் வைத்த நாடுகள் மோதினால் வர்த்தகம் சாத்தியமில்லை. நாம் வர்த்தக வழியே அவற்றை சமாதானத்துக்கு கொண்டு வந்தோம்” என்றார்.
 
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடமிருந்து மீண்டும் மறுப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!