1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Volcano eruption in Cango manymore death

வெடித்து சிதறிய எரிமலை; பலர் பலி; குழந்தைகள் மாயம்! – காங்கோவில் சோகம்!

World
காங்கோ நாட்டில் கடந்த வார இறுதியில் எரிமலை வெடித்த விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் 170க்கும் அதிகமான குழந்தைகளை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கோ நாட்டில் நையிராகாங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததில் 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. இந்த கோர விபத்தில் 2.கி.மீ தொலைவிற்கு சாலையில் எரிமலை குழம்பு பரவியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்புக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ள நிலையில் பெரியவர்கள் 40 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 170 குழந்தைகள் வரை காணாமல் போயிருக்க கூடும் என ஐ.நா குழந்தைகள் அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்!