வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (09:33 IST)

செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி! – வேலையை தொடங்கிய ரஷ்யா!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவில் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வாங்குவதில் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பெற்று தந்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா தொற்றுகள் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அவற்றிற்கு தடுப்பூசி செலுத்த ரஷ்ய மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் வளர்ப்பு பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.