1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (08:20 IST)

பல பகுதிகளில் காட்சியளித்த சிவப்பு சூப்பர் மூன்! – படம் பிடித்து மகிழ்ந்த மக்கள்!

வானில் நிகழும் மிகவும் அரிய நிகழ்வான சூப்பர்மூன் நேற்று தோன்றிய நிலையில் மக்கள் அதை படம்பிடித்து மகிழ்ந்துள்ளனர்.

பூமியை சுற்றி வரும் நிலவானது பெரிஜீ மற்றும் அபிஜீ சுற்று வட்ட பாதைகளில் வழக்கமான தூரத்தை விட பூமிக்கு மிக அருகே வருகிறது. அந்த சமயம் நிலவு வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீத ஒளியுடனும் காட்சியளிக்கும். இதை சூப்பர் மூன் என்று அழைக்கின்றனர்.

இந்த சூப்பர் மூன் நிகழ்வு நேற்று இரவு பல நாடுகளில் தென்பட்டது சிவப்பு நிறந்தில் பெரிய பந்து போல காட்சியளிக்கும் சூப்பர் மூனை மக்கள் பலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.