1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Utah monolith vanishes in the spot

அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய மோனோலித் மாயம்; ஸ்டான்லி குப்ரிக் மீது சந்தேகம்!

USA
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உட்டா பகுதியில் உலோக மோனோலித் திடீரென தோன்றிய நிலையில் அது மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் 1987ல் இயக்கி வெளியான படம் “2001; ஸ்பேஸ் ஒடிசி”. இந்த படத்தின் முதல் காட்சியில் குரங்குகள் மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் ஒரு காட்சியில் திடீரென பாலைவனப்பகுதியில் உலோக மோனோலித் ஒன்று தோன்றுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்க பாலைவனப்பகுதிகளில் மோனோலித்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவும் உட்டா பகுதியில் உள்ள மலைக்குன்று பக்கத்தில் உலோக மோனோலித் கண்டறியப்பட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. உலோக மோனோலித்தை ஏலியன்கள், இலுமினாட்டிகளோடு இணைத்து சதிகோட்பாட்டாளர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மோனோலித் தற்போது மாயமாகியுள்ளது.

அதை யாராவது திருடி சென்றிருக்கலாம் என்றும், அது தனியாருக்கு சொந்தமான பகுதி என்பதால் அதை ஆய்வு செய்வது பற்றி முடிவெடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மோனோலித் மாயமானது ஒருபுறம் இருக்க மோனோலித் பற்றி ஸ்டான்லி குப்ரிக் எப்படி முன்பே தனது படத்தில் காட்சி வைத்தார் என பலரும் பேசிக்கொள்ள தொடங்கியுள்ளார்களாம்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்