வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:16 IST)

வெள்ளை மாளிகையை காலி பண்ண மாட்டேன்! – அடம்பிடிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் நடப்பு அதிபர் ட்ரம்ப் விடாபிடியாய் இருந்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. அதில் நடப்பு அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜனநாயக கட்சியினர் பதவியேற்பு பணிகளுக்கு ஒருபுறம் தயாராகி வரும் நிலையில் மறுபுறம் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் ஜோ பிடன் எதிர்வரும் ஜனவரியில் பொறுப்பேற்க உள்ள நிலையில் நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் ட்ரம்ப் “ஜோ பிடன் தனது வெற்றியை நிரூபிக்காதவரை நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன்” என கூறியுள்ளார். இதனால் அமெரிக்க அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.