வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:58 IST)

உலகமே இந்திய கலாச்சாரம் மீது ஈர்ப்பு கொண்டுள்ளது! – மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர்!

மாதம்தோறும் நாட்டு மக்களோடு உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்திய கலாச்சாரம் பல நாட்டு மக்களுக்கு ஈர்ப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களோடு பிரதமர் மோடி உரையாடும் மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சி தற்போது ஒலிபரப்பாகியுள்ளது.

அதில் பேசிய பிரதமர் மோடி 100 ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவுக்கு கடத்தி செல்லப்பட்ட அன்னபூர்ணா சிலை மீட்கப்பட்டது குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார். மேலும் இந்திய கலாச்சாரம் மற்றும் புனித நூல்கள் உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும், இதனால் பலர் இந்தியாவுக்கு வந்து தங்களது வாழ்க்கையை தேடுவதாகவும், இந்தியாவின் கலாச்சார தூதர்களாக தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

மேலும் பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோனாஸ் மாசெட்டி என்பவர் இந்திய ஆன்மீக ஈர்ப்பால் தனது பெயரை விஸ்வநாத் என மாற்றிக் கொண்டுள்ளதுடன், பிரேசிலில் விஷ்வவித்யா என்ற அமைப்பை நடத்தி வருவதையும் பெருமையுடன் கூறியுள்ளார்.