வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (08:06 IST)

லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீர் கட்டுப்பாடு: ஏடிஎமை நோக்கி ஓடிய வாடிக்கையாளர்கள்!

ஏடிஎமை நோக்கி ஓடிய வாடிக்கையாளர்கள்!
வாராக் கடன்கள் அதிகமானதாகவும் நிதி நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்ததாலும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீரென மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இதனை அடுத்து 25 ஆயிரம் ரூபாயாவது உடனே எடுத்து விட வேண்டும் என்பதற்காக லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஏடிஎம்மில் நோக்கி விரைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
லட்சுமி விலாஸ் வங்கி தமிழகத்தை சேர்ந்த வாங்கி என்பதால் பெரும்பாலும் தமிழர்கள் தான் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும் ஏழை எளிய மக்களின் வங்கியாக கருதப்பட்ட இந்த வங்கிக்கு திடீரென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆனால் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆர்பிஐ அமைப்பு, லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் உங்களுடைய நன்மைக்காகவும் வங்கியின் நன்மைக்காகவும் தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது