தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்கக் கட்டணம்! மோட்டார் வாகன காங்கிரஸ் அதிருப்தி!
- ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு! – 14 ஆயிரத்தை நெருங்கிய இந்தியா!
- கேரளாவில் கொரோனாவால் கண்டறியப்பட்ட முதல் குடும்பத்தின் அனைவரும் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
- தலையணை மட்டுமே ஆடை! இணையத்தில் வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!
- சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்
ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேல் பலி: இதிலும் அமெரிக்காதான் முதலிடம்!
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பலியான நிலையில், இறப்பு எண்ணிக்கை லட்சத்தை தாண்டலாம் என கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வீரியமாக பரவி வரும் நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் சீனாவில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தாலும், நாளடைவில் அதை சீனா கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் நிலைமை மோசமாக இருந்தது. தற்போது அனைத்து நாடுகளை விடவும் அமெரிக்கா அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் 4,600 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். இதை உரிய காலத்தில் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
