1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (08:03 IST)

தலையணை மட்டுமே ஆடை! இணையத்தில் வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!

கொரோனா வைரஸால் ஊரடங்கில் இருக்கும் மக்கள் இணையதளங்களின் மூலம் ஏதாவது வித்தியாசமாக செய்து தங்கள் நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் நண்பர்களுடனும் சக மனிதர்களுடனும் தொடர்பில் இருப்பதற்கு சமூகவலைதளங்களே ஒரே வழியாக உள்ளன. இந்நிலையில் தினமும் ஏதாவது ஒரு சேலஞ்சை உருவாக்கி அதன் மூலம் பொழுதுபோக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்தியர்கள் கருப்புச் சட்டை சேலஞ்ச், லுங்கி சேலஞ்ச் என போய்க்கொண்டிருக்க, அமெரிக்கர்களோ பில்லோ சேலஞ்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த அது இப்போது இந்தியாவுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. உடலில் எந்த ஆடையும் இல்லாமல் தலையணைகளை மட்டுமே பயன்படுத்தி உடலை மறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அப்லோட் செய்யவேண்டும்.

அதன் பின்னர் அதே போல செய்ய சொல்லி தமது நண்பர்கள் யாரையாவது சேலஞ்ச் செய்யவேண்டும். இதனை இந்திய நடிகைகள் சிலரும் ஏற்றுக்கொண்டு புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.