திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (08:22 IST)

கேரளாவில் கொரோனாவால் கண்டறியப்பட்ட முதல் குடும்பத்தின் அனைவரும் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம்! சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்!

இந்தியாவில் கொரோனா பரவியபோது முன்னிலையில் இருந்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. ஆனால் அம்மாநில அரசின் சரியான திட்டமிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் இப்போது அங்கே கொரோனா பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் முதன் முதலாக கொரோனா  இருப்பது கண்டறியப்பட்ட குடும்பத்தினர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியைச் சோந்தவா் தாமஸ் ஆபிரகாம் (93). இவரது மனைவி மரியம்மா (88). இவர்கள் தங்கள் குடும்பத்தினர் 5 பேரோடு கடந்தமாதம் கேரளாவுக்கு திரும்பினர். அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தினார்.

ஆனால் அதை மீறி அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதனால் இவர்கள் மூலமாகவே கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அக்குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அனைவரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள தம்பதிகளின் பேரன் மருத்துவக் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.