தொடர்புடைய செய்திகள்
- உயிரோடு 11 பேர் எரித்துக் கொலை; மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்கா கண்டனம்!
- 11 கிராம மக்களை உயிரோடு எரித்த ராணுவம்! – மியான்மரில் வெறிச்செயல்!
- ஆங் சான் சூ ச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை
- வங்கதேசம், மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
- ஜப்பானை அடுத்து மியான்மரிலும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?
மியான்மர் படுகொலை: ஐநா சபை கடும் கண்டனம்!
மியான்மர் படுகொலைக்கு காரணமாக ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐநா சபை வலியுறுத்தி உள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் அமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் போராடி வரும் நிலையில் தேசத் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம், மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவி வருகிறது.
இந்நிலையில் மியான்மரில் வடமேற்கு பகுதியில் மொனிவா நகரில் ராணுவம் அணிவகுத்து சென்றபோது சிலர் அணிவகுப்பு மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்து 11 பேரை பிடித்து உயிரோடு எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. படுகொலைக்கு காரணமாக ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐநா சபை வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய ஐநா செய்தித் தொடர்பாளர், மியான்மரில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலை கண்டிக்கிறோம். மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை உள்ளது என குறிப்பிட்டார்.
