திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:47 IST)

ஆங் சான் சூ ச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூ ச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

 
அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் வின் ம்யின்-க்கும் இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆங் சான் சூ ச்சி.அவர் சிறைக்கு அனுப்படுவாரா, வீட்டுச் சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை. ஆங் சான் சூ ச்சி மீது ராணுவ அரசு தொடுத்துள்ள பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
 
76 வயதாகும் அவர் மீது ஊழல், அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.