திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:55 IST)

உயிரோடு 11 பேர் எரித்துக் கொலை; மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்கா கண்டனம்!

மியான்மரில் கிராமத்து மக்கள் 11 பேரை ராணுவம் எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் அமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது,. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் போராடி வரும் நிலையில் தேசத் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம், மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவி வருகிறது.

இந்நிலையில் மியான்மரில் வடமேற்கு பகுதியில் மொனிவா நகரில் ராணுவம் அணிவகுத்து சென்றபோது சிலர் அணிவகுப்பு மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்து 11 பேரை பிடித்து உயிரோடு எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த கொடூர செயலுக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.