1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Twitter agreement cancel by Elon Musk

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Elon
ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரபல தொழிலதிபர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் டுவிட்டர் இணையதளத்தில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகள் குறித்த எண்ணிக்கையை அறிவித்தால் மட்டுமே ஒப்பந்தத்தை செயல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் டுவிட்டரின் பங்குகள் 7 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும்  டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ரூ.1000 உதவித்தொகை திட்டம்: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!