வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (22:03 IST)

சென்னையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்!

traffic
சென்னையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ஈவேரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
 
நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின் நிரந்தரமாக மாற்றம் செய்யப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அமைந்தகரையை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாசாலையில் இடது புறமாக திருப்பி விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் நெல்சன் மாணிக்கம் சாலை செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்று அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது