வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:04 IST)

துருக்கி உள்ளாட்சி தேர்தல்.. ஆளுங்கட்சிக்கு பின்னடைவு.. எதிர்க்கட்சி அமோக வெற்றி..!

turkey president Erdogan
துருக்கியில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மேயர் உள்பட பல தொகுதிகளில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
துருக்கியில் நேற்று மேயர் உள்பட நகர நிர்வாக பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது 
 
துருக்கி தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் உள்பட பல பகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருவதாகவும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்து வருவதாகவும் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 
 
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 36 நகரங்களில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் ஆளும் கட்சி  24 மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த முடிவு அடுத்ததாக துருக்கியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சியினர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran