திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (14:50 IST)

சிஏஏ சட்டம்- எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

சிஏஏ சட்டம்  பற்றி எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு   நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி,   நேற்று முன்தினம் சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
 
இதற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
 மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழ் நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் வராது என்று     முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் சிஏஏ சட்டம்  பற்றி எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை 
 
ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.