வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (08:09 IST)

பொன்முடி தொகுதி காலி என அறிவிப்பு.. எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததால் கிடைத்த பலன்..!

Ponmudi
முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் அதிகாரியிடம் சட்டசபை செயலாளர் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை  அடுத்து அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது

இருப்பினும் உச்சநீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால் அவரது திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது

ஆனால் இந்த தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்ததை அடுத்து தற்போது திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவித்து அதற்கான கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டப்பேரவை செயலகம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ஏற்கனவே விஜயதாரணி ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதியில் காலியென அறிவிக்கப்பட்டிருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலின்போது இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva