செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!

நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும் அபாயத்தில் இருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பையிலிருந்து புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், அதே நேரத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானமும் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தின் அருகே மிக நெருக்கமாக வந்தன.
 
விமானங்கள் நேருக்கு நேர் வருவதை கண்ட இரு விமானங்களின் விமானிகளும் நொடிப் பொழுதில் சுதாரித்து, விபத்தை தவிர்க்க விமானங்களை வெவ்வேறு திசைகளில் திருப்பினர். இவர்களின் சமயோசித செயலால் ஒரு மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், திருப்பும்போது இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று பலமாக மோதிக்கொண்டன. இதில் இறக்கைகள் பலத்த சேதமடைந்தன.
 
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது இரு விமானங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து யாருடைய கவனக்குறைவால் ஏற்பட்டது? விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அளித்த தகவலில் பிழை உள்ளதா? என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva