செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 பிப்ரவரி 2026 (08:10 IST)

வழக்கறிஞராக மாறுகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. பரபரப்பு தகவல்..!

வழக்கறிஞராக மாறுகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. பரபரப்பு தகவல்..!
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 
 
எஸ்.ஐ.ஆர் பணிகளால் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வரும் மம்தா, இந்த வழக்கில் இன்று ஒரு வழக்கறிஞராக தானே நேரில் ஆஜராகி வாதாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசிய மம்தா, தற்போது சட்ட போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். 
 
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே தனது மாநில மக்களுக்காக உச்சநீதிமன்றத்தில் கருப்பு அங்கி அணிந்து வாதாட துணிந்திருப்பது இந்திய அரசியல் மற்றும் சட்ட வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த வாதம் நாடு முழுவதும் உற்றுநோக்கப்படுகிறது.
 
Edited by Siva