திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (16:07 IST)

வடகொரியா ஒப்பந்தத்தை மீறினால் என்னவாகும்? டிரம்ப் டிவிட்!

வடகொரியா மற்றும் அமெரிக்கா மத்தியில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இவை அனைத்தும் தனிந்து கடந்த 12 ஆம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 
அதிலும் முக்கியமாக வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கு கிம் ஜாங் அன் ஒப்புதல் அளித்திருந்தார். 
 
வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்காக கிம் இதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. 
 
அதேசமயம் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தும் வகையில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா நடத்தி வந்த ராணுவ ஒத்திகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், இதுகுறித்து டிரம்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் போது ராணுவ ஒத்திகை நிறுத்திவைக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால் ராணுவ ஒத்திகைக்கு அதிக செலவு ஆவதுடன், உண்மையான பேச்சுவார்த்தை நடக்கும்போது அதற்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும். ஆத்திரத்தையும் தூண்டும். பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடனான ராணுவ ஒத்திகையை மீண்டும் தொடங்குவோம். அப்படி நடக்காது என நம்புகிறேன் என கூறியுள்ளார்.