புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (18:53 IST)

அதிரடி வரிவிதிப்பு: சீனாவை கலங்க வைத்த டிரம்ப்!

சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீன பொருள்கள் மீது அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
 
உயர் தொழில்நுட்பம், தொழில்கள் மேலாதிக்க நோக்கத்தோடு மேட் இன் சீனா 2025 என்ற திட்டத்தை சீனா வகுத்துள்ளது. இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். எனவே, இந்த திட்டத்தை வீழ்த்தும் நோக்கத்துடனே இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
அதோடு, சீனா இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுத்தால், மேலும் அதிக வரிவிதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால், சீனாவின் நன்மைக்கு எதிராக அமெரிக்க அரசு ஒருதலைபட்சமான நடவடிக்கை எடுத்தால், எங்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எதிர் நடவடிக்கைகளை நாங்கள் உடனடியாக எடுக்க நேரிடும் என சீனா பதிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.