திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (15:25 IST)

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள தொடர் ரத்து மற்றும் தாமதங்களுக்கு, விமான நிறுவனத்தின் ஊழியர்கள் சுழற்சி மற்றும் திட்டமிடல் தோல்விகளே காரணம் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், இண்டிகோ தங்கள் ஊழியர் சுழற்சியை பராமரிப்பதில் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, விமான துறைக்கு இது ஒரு உதாரணமாக அமையும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
விமானிகளின் பாதுகாப்பிற்காகவே FDTL விதிமுறைகள் திருத்தப்பட்டன என்றும், தாமதங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணம் வழங்க, சிவில் விமானப் போக்குவரத்து விதிகளான CARs அமலில் உள்ளன என்றும் அவர் விளக்கினார். 
 
பணியாளர்களின் பற்றாக்குறையால் இன்று மட்டும் டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 450-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
மேலும் விமான துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் தற்போது புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்' என்றும் அவர் விவரித்தார்.
 
 
Edited by Mahendran