புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 டிசம்பர் 2025 (15:22 IST)

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், "வெகுஜன குடியேற்றம் என்பது அமெரிக்க கனவைத் திருடுவது" என்று தனது 'X' தளத்தில் பதிவிட்டதன் மூலம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 
 
வெளிநாட்டில் இருந்து வரும் குடியேற்றக்காரர்கள் அமெரிக்க தொழிலாளர்களிடம் இருந்து வாய்ப்புகளை பறிப்பதாக  அவர் வாதிட்டார்.
 
ஆனால், இந்த கருத்துக்குப் பலரும் அவரது தனிப்பட்ட குடும்ப பின்னணியை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். வேன்ஸ், இந்திய வம்சாவளி மகளும் அமெரிக்காவில் பிறந்தவருமான ஊஷா வேன்ஸை மணந்துள்ளார். இதனால், "உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளே அமெரிக்க கனவைத் திருடுகிறார்களா?" என்றும், அவர் தனது குடும்பத்தையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் பயனர்கள் சாடினர்.
 
முன்னதாக, அண்டை வீட்டார் தங்கள் இனம் அல்லது தோல் நிறத்தை பகிர்ந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது "முற்றிலும் நியாயமானது" என்று வேன்ஸ் கூறியதும் சர்ச்சைக்குள்ளானது. இந்த தொடர்ச்சியான கருத்துக்கள், குடியரசு கட்சிக்குள் அவரது நிலைப்பாட்டை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
 
Edited by Siva