1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (15:57 IST)

உலகப் பார்வை: 2018 உலகக்கோப்பை: ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 2018 கால்பந்து உலகக் கோப்பையில் தனது முதலாவது லீக் போட்டியில் 0-1 என்று மெக்சிகோவிடம் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
 
முதல் போட்டியிலேயே தங்கள் அணி தோல்வியடைந்ததால்,பலம் பொருத்திய பிரிவில் உள்ள ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
இதனிடையே, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து இடையே நடைபெற்ற மற்றொரு லீக் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
 
கொலம்பியாவின் அதிபராகிறார் இவன் டுகே
 
டெமாகிரடிக் சென்டர் கட்சியின் மூலம் புதியதாக அரசியலில் நுழைந்தவரான இவன் டுகே கொலம்பியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
தற்போது கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், டுகே 54 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கஸ்டவோ பெட்ரோ 41.8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.
 
பெற்றோர்-குழந்தைகள் பிரிப்புக்கெதிராக குரல் கொடுத்த மெலானியா டிரம்ப்
 
மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பெற்றோர் மற்றும் குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்காவின் கொள்கை நடவடிக்கை குறித்து அந்நாட்டின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 
"அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கும் நாடாக நாம் இருக்கவேண்டும் என்பதுடன், இதயத்தோடு ஆட்சிபுரியும் நாடாகவும் இருக்க விரும்புகிறோம்" என்று மெலானியா கருதுவதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
ஆப்கன்: முடிவுக்கு வந்தது சண்டை நிறுத்தம்?
 
ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.
 
ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.