திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (15:47 IST)

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...
பாஜக மூத்த அரசியல் பாதியாக பார்க்கப்படுபவர் ஹெச்.ராஜா. திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருபவர்களில் ஹெச்.ராஜா முக்கியமானவர். அதிலும் அறநிலைத்துறை கையில் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் இந்துக்களின் கட்டுப்பாட்டுக்கு மாற வேண்டும் என பல வருடங்களாக பேசி வருகிறார்.
 
எப்பவும் சர்ச்சையான கருத்துக்களை பேசுவார். ஒருமுறை ‘ஹைகோர்ட்டாவது ம****வது’ என சொல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கி அதன்பின் மன்னிப்பு கேட்டார்.  நடிகர் விஜய் மெர்சல் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் ஜிஎஸ்டி பற்றி பேசிய கருத்து பாஜகவினரை கோபப்படுத்திய போது விஜயின் முழுப்பெயர் ஜோசப் விஜய் என பதிவிட்டு விஜயின் வாக்களர் அட்டையை தனது twitter பக்கத்தில் பகிர்ந்தவர் இவர். அதனால், விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.
 
தற்போது சினிமாவிலும் நடிக்க துவங்கியிருக்கிறார் ஹெச்.ராஜா. கந்தன் மலை என்கிற திரைப்படத்தில் தர்ம போராளியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை வீரமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில்தான் இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...
 
டிரெய்லரில் வரும் ஒரு காட்சியில் கருப்பு சட்டை அணிந்திருக்கும் ஹெச்.ராஜா காவி உடை அணிந்திருக்கும் ஒருவரை அருவாளால் வெட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.