அணு ஆயுதங்களை அழிக்கும் வரை தடை நீடிக்கும்: அமெரிக்கா திட்டவட்டம்!

Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (15:40 IST)
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். 
 
இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிறது. பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் கிம் மனமிறங்கி வந்ததாக கூறப்படுகிறது.
 
இருநாட்டு அதிபர்களின் சந்திப்பிற்கு பிறகு சமரச ஒப்பந்தம் இப்போது ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த பொருளாதார தடைகள் உடனடியாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களை முற்றிலும் வடகொரியா அழிக்க வேண்டும். அவை அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர்தான் பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :