திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (15:08 IST)

கார்கிவில் ரஷ்ய படையினர் பீரங்கி தாக்குதல்!!

கார்கிவில் ரஷ்ய படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கார்கிவ் கிழக்கு அவசரகால சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன.
 
ஆனாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்கு போரை தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் தெற்கே அமைந்து கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கருங்கடல் அருகே உள்ள கர்சன் நகர் உக்ரைனின் கப்பல் கட்டும் தளங்களில் முக்கியமானதாக உள்ளது.
 
இதனைத்தொடர்ந்து கார்கிவில் ரஷ்ய படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கார்கிவ் கிழக்கு அவசரகால சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கார்கிவில் உள்ள கராசின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டடம் மற்றும் கார்கிவின் காவல்துறை கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது.
 
ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு பாதிக்கப்பட்ட கராசின் தேசிய பல்கலைக்கழக கட்டடம் மற்றும் காவல் நிலையத்தில் யுக்ரேனிய தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.