உக்ரைனின் கர்சன் நகரை பிடித்த ரஷ்யா! – முன்னேறும் ரஷ்ய ராணுவம்!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் அங்குள்ள கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன.
ஆனாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்கு போரை தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் தெற்கே அமைந்து கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கருங்கடல் அருகே உள்ள கர்சன் நகர் உக்ரைனின் கப்பல் கட்டும் தளங்களில் முக்கியமானதாக உள்ளது.