1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (09:30 IST)

ரஷ்யா - உக்ரைன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஏராளமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
 
இதனை அடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உள்ள அனைத்து பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.