ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (08:53 IST)

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள்! – 58 பேர் தமிழகம் வந்தனர்!

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்கிருந்து இந்தியா அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் 48 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.

அப்படியாக உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 58 மாணவர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். அவர்களை வரவேற்று அதிகாரிகள் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை உக்ரைனில் இருந்து 88 மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.