அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வி!.. இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!..
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தை கடந்த பல நாட்களாகவே நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி நடந்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது..
இதையடுத்து, இஸ்ரேல் நாடு ஈரான் நாட்டை தாக்க துவங்கியது.. இந்நிலையில், இஸ்ரேலோடு தற்போது அமெரிக்காவும் சேர்ந்துகொண்டது. அதாவது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது. அந்த நகரம் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கிறது.. ஈரான் அதிபர் மாளிகையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நடத்தி வருகின்றன.. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈரான் அருகே நிறுத்தப்பட்டிருக்கிறது. 2003ம் வருடம் ஈரான் ஆக்கிரமிப்புக்கு பின் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ குவிப்பு என இது சொல்லப்படுகிறது...