திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (08:36 IST)

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை! – தொடரும் தடைகள்!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யாவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் இறங்கியுள்ளது. கடந்த 8 நாட்களாக ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது.

முன்னதாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து தெரிவித்திருந்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்தது.

தொடர்ந்து தற்போது உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் விளையாடுவதற்கு உலக ரக்பி நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.