திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (09:02 IST)

மாஸ்டர் கார்டு, விசா கார்டு இனி ரஷ்யாவுக்கு இல்லை: அதிரடி அறிவிப்பு!

இனி மாஸ்டர் கார்டு, மற்றும் விசா கார்டு, ஏடிஎம் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் ரஷ்யாவுக்கு வழங்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்க நிறுவனமான மாஸ்டர் கார்ட் மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் இனி ரஷ்யாவுக்கு கார்டு சேவைகளை வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட கார்டுகளுக்கு அளித்துவரும் சேவையையும் நிறுத்தவும் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக ஏற்கனவே விசா நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது