1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (08:25 IST)

ரஷ்ய விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை! – ஜோ பைடன் உத்தரவு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதேசமயம் உக்ரைன் பகுதிகளில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க ராணுவம் சண்டை போடாது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.