தொடர்புடைய செய்திகள்
- இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் அரசு எதிர்ப்பாளர்கள்
- இலங்கை எம்பி கொலை எதிரொலி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து!
- இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
- மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் !
- இலங்கை முழுவதும் திடீரென முழு ஊரடங்கு அமல்! – இலங்கையில் கடும் பதட்டம்!
வெந்து தணிந்தது ராஜபக்ஷே வீடு..! – இலங்கையில் கைமீறிய போராட்டம்!
இலங்கையில் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் ராஜபக்ஷே வீடு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தற்போது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபக்ஷே குடும்பத்திற்கு ஹம்பன்தோட்டா பகுதியில் இருந்த அவர்களது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வீடு கொளுந்துவிட்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
