1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 மே 2022 (15:52 IST)

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் !

students protest
லத்துவாடி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா  அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லத்துவாடி பகுதியில் பேரறிஞர் அண்ணா  அரசுக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ,சேதமடைந்த கல்லூரி விடுதி மேற்கூரை மற்றும் அங்குள்ள கழிவறைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என  இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.