1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 மே 2022 (12:38 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த நிலையில் இன்றும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
கச்சா எண்ணெயின் விலை உயரவில்லை என்றாலும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தது என்றும் அதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது