தொடர்புடைய செய்திகள்
- மூன்றாவது போட்டியில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றி… தொடரையும் கைப்பற்றியது!
- போர் தொழில் ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அசோக் செல்வன்..!
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு!
- அயர்லாந்து செல்லும் இந்திய அணிக்குக் கேப்டனாக பும்ரா!
- இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி… தொடரை வெல்லப்போவது யார்?
இந்தியாவுடன் மீண்டும் போர்? பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் பரபரப்பு கருத்து..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் ஏற்கனவே இருமுறை நடந்துள்ள நிலையில் இனிமேலும் இந்தியாவுடன் ஆன போருக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனி மேலும் ஒரு போருக்கு நாடு தயாராக இல்லை என்றும் எனவே இந்தியாவுடன் இனி இப்போதைக்கு போர் எதுவும் இருக்காது என்றும் பாகிஸ்தான் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக உறவில் விரிசல் அடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் போர் நடத்துவது தேவையற்றது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
