1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (08:07 IST)

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி… தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.

இதையடுத்து இன்று மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. கடந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்று கண்டிப்பாக வெல்லவேண்டிய போட்டியில் அவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் வெளியில் உட்காரவைக்கப்படலாம் என தெரிகிறது.

அல்லது சஞ்சு சாம்சன் உட்காரவைக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ்வுக்குக் கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.